Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டாக அடைத்து வைத்து…. அடுத்தவர் மனைவிக்கு வன்கொடுமை….. வெறி தீர்த்த பாஜக அமைச்சர்….!!!!

குஜராத் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹால்தார்வாஸ் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், தனது மனைவியை அமைச்சர் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “2015ம் ஆண்டு என் மனைவிக்கும், அமைச்சருக்கும் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து எனது மனைவியை அவர் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார்.

இதையடுத்து ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் எனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். கொரோனா காலத்தில் கூட தனியறையில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |