Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு…. கண்காணிப்பாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாகா விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உட்பட பல்வேறு பெண்களுக்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். தற்போது போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |