அடுத்த 5 ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐசிசி நேற்று அறிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.
2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள போட்டியின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டி 61 டி20 போட்டி என மொத்தம் 141 சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற 12 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் 173 டெஸ்ட், 281 ஒருநாள் மற்றும் 323 டி20 போட்டிகள் என மொத்தம் 777 சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன.
2024 டி20 உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலும், 2026 டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.
இதே போல் இங்கிலாந்துக்கு எதிராகவும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதே சமயம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தானுடன் எந்த தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More men’s cricket coming up in the 2023-27 FTP cycle 👀
Details ➡️ https://t.co/LCjfFBtMP5 pic.twitter.com/J269mj50d7
— ICC (@ICC) August 17, 2022