Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற கூட்டம்…. 86 அம்ச திட்டங்கள்…. சிறப்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு வாடகை பிரச்சினைகள் சரி செய்யப்படும் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில்  நகர்மன்ற கூட்டரங்கம் அமைந்துள்ளது. இங்கு நார்மன்ற கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 86 திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஊட்டியில் அமைந்திருக்கும் மார்க்கெட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 96 கடைகளில் ஏலம் விடப்படாததால் நகராட்சிக்கு மிகுந்த இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே வாடகை பணத்தை குறைத்து கடைகளை ஏலத்திற்கு ‌ விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து தெருநாய்களின் தொல்லைகளை குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஆணையாளர் காந்திராஜ் பதிலளித்தார். அவர் வாடகை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், குடிநீர் விநியோகம் செய்யப்படாத பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். ‌ இதனையடுத்து ஊட்டியில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும், கட்டிட அனுமதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது எனவும் கூறினார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதி மற்றும் ஏ.டி.எம் வசதிகள் செய்து கொடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |