Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5-ஆம் தேதி இங்கெல்லாம் கரட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 5-ஆம் தேதி மின் தடை  அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின்நிலையங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |