Categories
தேசிய செய்திகள்

5 ஆம் வகுப்பு சிறுமிக்கு… பள்ளியில் நடந்த கொடூரம்… கண்ணீர் வரவைக்கும் சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் 11 வயதான ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கை விசாரணை செய்த பாட்னா நீதிமன்றம், குற்றவாளியான அரவிந்த் குமார் என்ற தனியார் பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது ஆசிரியர்களை நம்பி தான். ஆனால் பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

Categories

Tech |