Categories
மாவட்ட செய்திகள்

5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு…. அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து தாசில்தார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் வெள்ளைத்தாளில் உங்களது சுய விவரக் குறிப்புகள் எழுதி அனுப்ப வேண்டும். அதுமட்டுமில்லாமல் கல்வித்தகுதி சான்றிதழ், வேலைவாய்ப்பக பதிவு நகல், சாதிச் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மற்றும் மதிப்பெண் சான்று நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்த சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் போட்டித் தேர்வின் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை காங்கயம் தாலுகா அலுவலகத்திற்கு வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தேதிக்கு பிறகு வரப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்றும் தபால் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |