செல்போன் ஓயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி இந்த கோபுரத்தில் இருந்து 5000 ரூபாய் மதிப்பிலான 10 மீட்டர் அளவிலான கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர் ராஜமணி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அதில் வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அதியமான் என்பவர்தான் ஒயரை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.