தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு உள்ளாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது..
அனைத்து விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது..
மேலும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்..