தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.
அந்தவகையில் தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ்., தொழிற்துறைச் சிறப்பு செயலாளராக லில்லி ஐ.ஏ.எஸ்., தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்., நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண் இயக்குநராக சங்கீதா, தமிழக சாலைகள் திட்டப் பணிகள் இயக்குநராக கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.