தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
Categories