Categories
தேசிய செய்திகள்

5 கிலோ இலவச அரிசி…. மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு?…. மத்திய அரசின் முடிவு என்ன….???

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த இலவச திட்டம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் காலாவதி ஆகிறது. மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் காலக்கெடுவை மேலும் நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தால் மத்திய அரசிற்கு 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த திட்டம் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகளுக்கு 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |