Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பனைமரம் கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, வர்ஷினி, கலையரசி என்ற மூன்று மகள்களும், ஸ்ரீநாத், மோசத் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது 5 குழந்தைகளுக்கும் எலி மருந்து பவுடரை தண்ணீரில் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து கவிதா சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷம் குடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவிதாவின் சகோதரர் உறவினர்களுடன் சென்று தனது சகோதரி மற்றும் ஐந்து குழந்தைகளையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |