மத்திய கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லெட் அனைத்து ஆலயங்களும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் பாலா மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். அங்குள்ள அனைத்து ஆலயத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற தம்பதிகளுக்கு மாதம் 1500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் தெரிவித்தபோதே கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. மாநிலத்தில் 18.8 சதவீத மக்கள் தற்போது 14 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் கத்தோலிக்கர் குழந்தையை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க இந்த உதவிகள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.