ராஜஸ்தானின் ஒரு பகுதியில் ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து சேமிப்புக் கொள்கலனில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என்று அவர்கள் தேடிப் பார்த்தனர். தேடிப் பார்க்கும் போது அருகிலுள்ள கொள்கலனை எதார்த்தமாக திறந்து பார்க்கையில் ஐந்து குழந்தைகளும் அதில் கிடந்தது தெரியவந்தது.
பிறகு காவல்துறையினர் தீயணைப்பு வீரர் உதவியுடன் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.