Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 கொலை வழக்கு…. “சிக்கிய ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டாஸ்”….. ஆட்சியர் அதிரடி.!!

பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கடந்த 7ஆம் தேதி அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து நாங்குநேரி மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்..

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சிதம்பரம் வரும் 20ஆம் தேதி வரை ராக்கெட் ராஜாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அவரை போலீசார் கொண்டு சென்றனர்.. அங்கு சிறை கண்காணிப்பாளர் உடன் ஆலோசனை நடத்திய பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜாவை அங்கிருந்து அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..

மேலும் ராக்கெட் ராஜா மீது சென்னையில் நடந்த 3 கொலைகள் உட்பட 5 கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்  ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |