Categories
உலக செய்திகள்

5 கோடி குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசி…. ஐநா புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அம்மை நோய் மற்றும் பிற நோய்களுக்கான தடுப்பூசி போட முடியாமல் விடுபட்ட சுமார் 5 கோடி குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகள் போடுவதற்கான புதிய செயல் திட்டத்தை நாத் தலைமையிலான சர்வதேச தடுப்பூசி செயல்திட்ட குழு அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |