Categories
மாநில செய்திகள்

‘5 சவரனுக்கு கீழ் நகைக்கடன்…. 100% தள்ளுபடி”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுந்த பயனாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு கட்டமாக நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 சவரன் இற்கு உட்பட்ட நகை கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |