இந்தியாவில் 5 ஜி அலைவரிசை ஏலம் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 3300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 600 மெகா ஹெர்ட்ஸ் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்தின் 5 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், 1,49,967 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்றுள்ளது. இந்த ஏலத்தில் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை அதிக விலைக்கு ஏலம் போனதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அலை வரிசையில் 40 சதவீதம் மட்டும் ரூ. 39.300 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை குறைந்த நீளம் கொண்டது என்பதால், நீண்ட தூரத்துக்கு சிக்னல் கிடைக்கும். இந்த அலைக்கற்றையை தான் உலக அளவில் பல நாடுகள் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாகத்தான் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்குவதற்கு ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டன. மேலும் 5ஜி அலை வரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.