Categories
தேசிய செய்திகள்

“5 ஜி சேவை” ஆண்ட்ராய்டு போனில் பெறுவது எப்படி…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய 4 ஜி சேவையை விட அதிவேகமான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி  அலைக் கற்றை சேவையை சோதனை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. இந்த அலைக்கற்றை காண ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது‌. அதன் பிறகு ஜியோ நிறுவனம் முக்கியமான நகரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5ஜி அலைகற்றை சேவை அமலுக்கு வரும் என்று அறிவித்தது.

அதன்படி நாட்டின் 13 நகரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த 5 ஜி சேவையை உங்கள் செல்போனில் பெறுவதற்கான வசதிகள் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ்க்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு வைஃபை அண்ட் நெட்வொர்க் ஆப்சனை தேர்வு செய்து சிம் அண்ட் நெட்வொர்க் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் preferred network type என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் 5 ஜி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Categories

Tech |