தென் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கூகுள் டொமைனை 5 டாலருக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னமெரிக்காவில் அர்ஜென்டினா நகரிலுள்ள Nicolas Kuroña என்ற இளைஞர் google.com.ar என்னும் கூகுள் டொமைன் விற்பனைக்கு இருந்ததாகவும், அதை நான் சட்டப்பூர்வமாக வாங்கி விட்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த கூகுள் டொமைனை 5.80 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனையடுத்து அர்ஜென்டினா அதிகாரிகள் google.com.ar-ஐ புதுப்பிக்க மறந்ததால் கூகுள் விற்பனைக்கு வந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் உடனடியாக அர்ஜென்டினா அதிகாரிகள் அந்த google.com.arஎன்ற டொமைனை அந்த இளைஞரிடம் இருந்து மீது எடுத்ததாகவும் MercoPress செய்திகளை வெளியிட்டுள்ளது.