நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நகைக் கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியானவர்களுக்கு இன்னும் ஐந்து நாட்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நகைக்கடன் முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கவரிங் நகைகளுக்கும் பணம் தந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.