Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 நாட்களில் 4 முறை சந்திப்பு….. காங்கிரசுக்கு பி.கே.வின் மாஸ்டர் பிளான்…. என்ன தெரியுமா?….!!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றார். அந்த வரிசையில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்தார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கான ஆய்வறிக்கையை சோனியா காந்தியிடம் அளித்தார்.

இதில் அக்கட்சிகூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள் மற்றும் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.கடந்த நான்கு நாட்களில் மூன்று முறை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திய நிலையில் டெல்லியில் நேற்று 4-வது முறையாக சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், அம்பிகா சோனி மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இருந்தனர்.

Categories

Tech |