100 வருடங்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதனால் அந்தப் பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல்வேறு வன விலங்குகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மண்சரிவு காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Categories