Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு…. இடி மின்னலுடன் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பதினோராம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் 11ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |