Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாள் உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்கள் உட்பட வரும் ஏப்ரல் 6 முதல் 6 ஆம் தேதி வரை மூன்று நாட்களும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மே 2 முதல் மறுநாள் 3 தேதி மாலை 4 மணி வரை, அனைத்து மதுபான கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் மூட வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |