தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு திசையிலிருந்து பருவக்காற்று வீசத் தொடங்கி இருப்பது காரணமாக ஐந்து நாட்கள் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
மேலும் சென்னை உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.