இஸ்ரேலை சேர்ந்த பிரபல நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது.
அதிவேக ரீசார்ஜ் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோர் டாப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரியை கண்டறிந்துள்ளது. அந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த அதிவேக பேட்டரி தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் வாகன ஓட்டுனரின் அனுபவத்தை தலைகீழாக மாற்றக்கூடியது.
அதிக தூரம் பயணம் செல்லும்போது சார்ஜ் ஏற்றும் கவலையை முற்றிலுமாக இது நீக்கிவிடும். பொதுவாக சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த பேட்டரி அந்த நிலையை முற்றிலும் மாற்றி விடும்” என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்நிறுவனம் மொபைல், ட்ரோன், ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.