தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும்.
அவ்வகையில் கடந்த 2014 முதல் 2019 வரை உள்ள வருடங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை பெறும் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதாவது வருகின்ற 2022ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதிக்குள் புதுப்பித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இணையம் வழியாக, நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.இணையத்தில் www.tnvelaivaaippu.gov.in என்ற முகவரியின் வழியாக செல்ல வேண்டும்.
இப்போது Renewal செய்வதற்கு முதலில் உங்களுடைய user id மற்றும் password கொடுத்து லாகின் செய்ய வேண்டும். எந்த இன்ஸ்டியூட்டில் பதிவு செய்தீர்களோ அங்கேயே சென்று யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் எழுதி வாங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் மேற்கண்ட இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்யலாம். லாகின் செய்தவுடன் மற்றொரு பக்கம் திறக்கப்படும். அதில் update profile என்பதை கிளிக் செய்து Renewal என்பதில் candidate Renewal என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது மற்றொரு பக்கம் திறக்கப்படும். அதில் உங்களுடைய பதிவு எண், தற்போதைய பதிவு நாள், பதிவாளரின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Renewal என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இப்போது உங்கள் வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்கப்படும்.