தமிழகத்தில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இன்று புதிதாக 5 வாக்குறுதிகளை அதில் இணைத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனையடுத்து இன்று புதிதாக 5 வாக்குறுதிகளை அதில் இணைத்துள்ளது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தால் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது. சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலைக்கு தடை, இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 திரும்பப் பெற வலியுறுத்தல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம், மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 நிராகரிப்பு ஆகியவற்றை சேர்த்துள்ளது.