நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சாப்பிடும் போது மிக கவனமாக சாப்பிட வேண்டும்.
சிலருக்கு வேலை அதிகமாக இருப்பதால் நேரம் தவறி சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. அதிலும் குறிப்பாக சில நேரங்களில் வயிறு நிறைய உணவுகளை உட்கொள்வது மிகவும் தவறானது. அதன்படி எப்போதும் மாலை 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவு உட்கொள்ளும் பழக்கத்தை கைவிடுங்கள். மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் எடுக்கவும். பகலில் அதிக தண்ணீர் குடிக்கலாம்.
இரவு நேரத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அதனால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படும். மாலை 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவு சாப்பிட்டால் இரவில் சரியாக செரிமானம் நடக்காமல் அஜீரண கோளாறு ஏற்படும். அதுமட்டுமன்றி பல பக்க விளைவு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாலை 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவு சாப்பிடுவதை மாற்றிக் கொள்ளுங்கள்.