Categories
தேசிய செய்திகள்

5 மணி நேர போராட்டம்… மீட்டும் புரோஜனம் இல்லை… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டம் ஜோங்கேதி கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்பகுதியில் 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில் அந்த கிணற்றில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் 12 அடி ஆழத்தில் அந்த சிறுமி சிக்கியிருப்பதை தெரிந்த கிராம மக்கள் விரைந்து செயல்பட்டு மண்ணை தோண்டி சிறுமியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆழ்துளை கிணறு தோண்டிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |