Categories
மாநில செய்திகள்

5 மணி வரை அனுமதியில்லை…. மதியத்திற்கு மேல் முழு ஊரடங்கு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கூடலூர் தொகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகள் முன்பு குவிந்ததால், மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும். மதியத்திற்கு மேல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |