Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் உட்பட 20 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் கடலூர்!

கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 9 சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் 390 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சரக்கு வாகனம் மூலம் கடலூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 100 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தது. நேற்று வரை, பாதிக்கப்பட்டுள்ள 390 பேரில் 370 பேர் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். இன்று காலை நிலவரப்படி சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 5 பேருக்கும், செவிலியர்கள் 5 பேர் மற்றும் சுகாதாரப்பணியாளர் 9 பேர், சுகாதார ஊழியர் ஒருவர் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 600 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அவ்வாறு சோதனை முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் கடலூரில் கொரோனா பாதிப்பு உச்சமடையும் வாய்ப்பு உள்ளது. கடலூரில் தற்போது வரை 92 மண்டலங்கள் கொரோனா பாதித்த பகுதிகளாக உள்ளது.

Categories

Tech |