மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் சகாயராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின் மனைவி திரும்ப வருவார் என கடந்த 5 மாதங்களாக சகாயராஜ் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.
ஆனால் மனைவி திரும்பி வராததால் மன உளைச்சலில் இருந்த சகாயராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாயராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.