உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜனவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில்உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் எப்போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 5 மாநில தேர்தல் நடத்துவது குறித்து இன்று மத்திய சுகாதாரத் துறையுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.