நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலைப் பற்றி மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொளி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளது. பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் காரணமாக பொதுக்கூட்டம் நடத்த தடை மற்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா அல்லது தடையை மேலும் நீட்டிப்பதாக என்பது குறித்து இன்று முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.