பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை பதிவிடும் வகையில் நமோ செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அடுத்த அரசை தேர்வு செய்யும் முக்கிய காரணிகளாக அமையும் பிரச்சனைகள் குறித்து பிரதமரின் நமோ செயலியில் பொதுமக்கள் பதிவிடலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு பலன் அளித்த திட்டங்கள், மத்தியில், மாநிலத்தில் ஒரே அரசு இருப்பதால் ஏற்பட்ட வளர்ச்சி குறித்தும் பதிவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.