Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது.  அளிக்கும்இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக நேற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் நீலகிரி, தேனி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |