Categories
அரசியல் மாநில செய்திகள்

5 முதல் 10 ஆண்டுகளில்…. சாதியை அழித்து விடலாம்…. தமிழச்சி பத்மபிரியா…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மக்களிடையே நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் மநீம தலைவர் கமலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் மநீம வேட்பாளர் தமிழச்சி பத்மபிரியா சான்றிதழில் இருந்து சாதியை தூக்கி விட்டால் 5 முதல் 10 ஆண்டுகளில் சாதியை அழித்து விடலாம். முன்பு அனைவரும் சமமற்ற நிலையிலிருந்த பொது ஐடா ஒதுக்கீடு தேவைப்பட்டது. இப்போது அந்த நிலை மாறி சமூகத்தில் எல்லோரும் சமம் என்று நினைக்கும் மனநிலை வளர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |