Categories
கரூர் மாவட்ட செய்திகள்

5 முறை திருமணம்….. 7வதுக்கு ஆயத்தம் ….. கரூர் பெண்ணின் விதவித ஆசை….. ஏமாந்த ஆண்கள்….!!!!

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று பலரிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக சிவகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் வீட்டில் இருந்த சௌமியாவையும் கையோடு அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருச்சியை சேர்ந்த சௌமியா கணவன் இறந்து விட்டதாக கூறி கரூரில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவரின் கதையை கேட்ட அக்கம் பக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டும் சிவக்குமாரை சௌமியாவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து சௌமியாவும் அதற்கு சம்மதிக்க சிவகுமாரும் சௌமியாவும் நெருங்கி பழகியுள்ளனர். சௌமியா சிவகுமாரிடம் தான் தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளேன். தனக்கு அமைச்சரை தெரியும், உங்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று ஆசை வார்த்தை பேசியுள்ளார். அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து சிவகுமாருக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் என பலரும் அரசு வேலைக்காக சௌமியாவிடம் பத்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிவக்குமாரை கரூருக்கு அழைத்துச் சென்ற சௌமியா அங்குள்ள ஒரு பங்களாவை காட்டி இதுதான் தனது தாய் வீடு என்றும், தான் காதல் திருமணம் செய்து கொண்டதால் என் தாயே வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சிவகுமார் அந்த வீட்டு தொடர்பாக பலரிடம் விசாரணை செய்த போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த வீட்டிற்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை. அந்த வீட்டில் இருப்பவரையும் இவர் ஏமாற்றியுள்ளார். அது மட்டும் இல்லாமல் போலீஸ்காரர் உட்பட இதுவரை 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.

தொடர்ந்து ஆறாவதாக சிவகுமாரையும் ஏழாவதாக கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரையும் திருமணம் செய்வதற்கு ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார். பின்னர் சௌமியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |