அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் சர்ச்சை வெடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பலரது அலைபேசிகள் மத்திய அரசால் உளவுபார்க்கப்பட்டன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார் அளித்துள்ளார். 5 முறை செல்போனை மாற்றியும் ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என கூறினார். மேலும் 2017ல் இருந்து தனது செல்போனை யாரோ ஒட்டு கேட்பதாக சந்தேகம் உள்ளது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.