இந்தியா சார்பில் 5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்கும் நோக்கில் இந்த விசா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவையானது முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 170 நாடுகளில் மீண்டும் இ -விசா வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், வெளிநாட்டு பயணிகள் இனி இந்திய தூதரகங்களுக்கு விசாவுக்கு செல்ல வேண்டியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.