சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவுவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 4 வயது சிறுமிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.