உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் வான்வெளி பரப்பையும் தங்கள் நாட்டில் அனுமதிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளது. இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்த உள்ளதாக அந்நாட்டு அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.