Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்…750 இடங்களில் சிறப்பு மையங்கள்… ஆட்சியர் வெளியிட்ட இலவச எண்…!!

5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 750 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் 10ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 750 இடங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 80% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எனவே மீதி உள்ள மக்கள் முன்வந்து தடுப்பூசியை செளுத்திகொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மளை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் இதுவரை 8,91,922 பேர் முதல் டோஸ் தடுப்பூசி, 2,90,487 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். எனவே நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் இருந்தால் 1077 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |