நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சீனுராமசாமி இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் உருவானது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் ரிலீசாகவில்லை . இதன்பின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
மேலும் 4-வது முறையாக விஜய் சேதுபதி -சீனு ராமசாமி இணைந்துள்ள மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.