Categories
தேசிய செய்திகள்

5 வயதிற்குட்பட்ட குழந்தைளுக்கு…. சபரிமலையில் இப்படியொரு சலுகை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் சான்று சமர்ப்பிக்க தேவை இல்லை என்று கேரள அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வரும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு தேவை இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் முன்பதிவிற்கு ஆதார் நகல், பாஸ்போர்ட் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் பள்ளி, கல்லூரி அடையாள அட்டைகளை வைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் தரிசனத்திற்காக உடனடி முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படும்.

Categories

Tech |