லண்டனை சேர்ந்த 16 வயதுடைய பெண் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவுடன் மிகவும் உற்சாகமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் Muswell Hill என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுள்ள பெண் Esther Rich. இப்பெண்ணிற்கு inherited spherocytosis என்ற விளைவு அவரின் தந்தையிடமிருந்து இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் 5 வயதாக இருக்கும்போது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது. உடலின் மிக முக்கிய பாகம் மண்ணீரல் தான் என்பதால் அது அகற்றப்பட்டவுடன் நோய் எளிதாக தாக்கும்.
எனவே கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து Esther தன்னை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து எஸ்தர் கூறுகையில் கடந்த ஓராண்டாக, என் நண்பர்கள், பாட்டி மற்றும் உறவினர்களை காணாமல் தவித்து வந்ததாகவும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ஏனெனில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும் என்பதால் இனியும் தன்னை பாதுகாத்துக் கொண்டு இருக்க தேவையில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் தன் விடுமுறைக்கு செல்ல இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் என்னால் காத்திருக்க முடியவில்லை என்றும் தன் நண்பர்களுடன் குரோஷியாவிற்கு செல்ல விரும்புவதாகவும், தன் பாட்டி ஜெசிகாவை காண ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.