ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும் . இந்நிலையில் ஆதார் கார்டு வாங்க சில ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு கொடுக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டு வந்த நிலையில் இனி பிறப்பு சான்றிதழ் இல்லாமலேயே ஆதார் கார்டு வாங்கலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது .
எனவே குழந்தைகளுக்கு ஆதாரமாக பிறப்பு சான்றிதழ் பெறும் வரை பெற்றோர்கள் காத்திருக்கத் தேவை கிடையாது. மருத்துவமனையில் வழங்கப்படும் டிஸ்சார்ஜ் ரசீது மற்றும் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டையை ஆதாரமாகக் கொண்டே ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://uidai.gov.in என்ற ஆதார் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.